2017-ஆம் ஆண்டு பிபிசி நேரலை நேர்காணலின் போது, இரண்டு சிறு குழந்தைகள் திடீரென அறைக்குள் நுழைந்து ரகளை செய்த வீடியோ இணையத்தில் உலக அளவில் வைரலானது. பேராசிரியர் ராபர்ட் கெல்லி தீவிரமான அரசியல் சூழல் குறித்துப் பேசிக்கொண்டிருந்த போது, அவரது மகள் மரியன் மற்றும் மகன் ஜேம்ஸ் ஆகியோர் துள்ளிக் குதித்து உள்ளே வந்த அந்த காட்சி இன்றும் பலரது ஃபேவரைட் வீடியோவாக உள்ளது.
மேலும் தற்போது இந்தச் சிறுவர்கள் வளர்ந்து பெரியவர்களாகிவிட்ட நிலையில், அந்த பழைய நினைவுகளைப் பகிரும் புகைப்படங்கள் மற்றும் செய்திகள் சமூக வலைதளங்களில் மீண்டும் கவனத்தைப் பெற்று வருகின்றன. தற்போது மரியன் மற்றும் ஜேம்ஸ் இருவரும் பள்ளி செல்லும் மாணவர்களாக வளர்ந்துள்ளனர். அன்று உலகையே சிரிக்க வைத்த அந்த சுட்டித்தனமான குழந்தைகள், இன்று எப்படி இருக்கிறார்கள்.
View this post on Instagram
“>
இதனால் இதை பார்த்த நெட்டிசன்கள் “காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது” என்று வியந்து போகின்றனர். அந்த நேர்காணலின் போது குழந்தைகளை அவசரமாக வெளியே இழுத்துச் சென்ற அவர்களது தாய் கிம் ஜுங்-ஆ மற்றும் பேராசிரியர் கெல்லி ஆகியோருடன் இருக்கும் தற்போதைய புகைப்படங்கள், அன்று அந்த வீடியோவைப் ரசித்தவர்களுக்கு ஒரு இனிமையான நினைவூட்டலாக அமைந்துள்ளது.
