​”அதிமுக, பாஜகவிடம் சரண்டர் ஆகிவிட்டது” என்று தவெக தலைவர் விஜய் சேலத்தில் பேசிய விமர்சனம், தற்போது அரசியல் களத்தில் ஒரு பெரிய போராகவே மாறியுள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திருப்பத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது விஜய்யை மிகக் கடுமையாகச் சாடினார். “விஜய்க்கு முதலில் கட்சி நடத்தத் தெரியவில்லை” என்று அவர் நேரடியாகவே விமர்சித்தார்.

​தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “கரூர் சம்பவத்தின்போது பயந்து போய் 15 நாட்கள் கட்சி அலுவலகத்தையே மூடியவர் தான் இந்த விஜய். அதுமட்டுமில்லாமல், சுமார் 72 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கிக் கிடந்தவர். அப்படிப்பட்டவர் எம்மைப் பார்த்து சரண்டர் என்று சொல்வதா?” என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.

விஜய்யின் அரசியல் அனுபவமின்மையைச் சுட்டிக்காட்டிய எடப்பாடியார், தன்னை விமர்சிக்க விஜய்க்கு எந்தத் தகுதியும் இல்லை என்பதைத் தனது பாணியில் மிகக் காரசாரமாகப் புரிய வைத்தார். இதனால் அதிமுக – தவெக இடையே தற்போது வார்த்தைப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.