
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே உள்ள கே.சவுளூர் பகுதியில் காவேரி என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான இவர் 1996 ஆம் ஆண்டு கோவிந்தம்மாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக திருமணமான சில மாதங்களிலேயே பிரிந்து விட்டனர்.
இதைத்தொடர்ந்து காவேரி கோவிந்தம்மாள் அக்கா மங்கம்மாளை 1997 ஆம் ஆண்டு 2 வது திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமாகிய சில வருடங்களிலேயே மங்கம்மாளும் காவிரியை விட்டுவிட்டு சென்றுவிட்டார்.
இதைத்தொடர்ந்து காவேரி மீண்டும் துடுக்கனஹள்ளி பகுதியை சேர்ந்த 45 வயதாகும் கோவிந்தம்மாள் என்பவருடன் உறவு வைத்துக் கொண்ட நிலையில் திருமணம் செய்யாமல் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கோவிந்தம்மாளுக்கு துடுக்கனஹள்ளிப் பகுதியை சேர்ந்த தங்கராஜ் (35) என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
இதனையறிந்த காவேரி கோவிந்தம்மாளிடம் சென்று எச்சரித்துள்ளார். ஆனால் கோவிந்தம்மாள் தங்கராஜுடன் பேசுவதை நிறுத்தவில்லை. இதனால் கோபமடைந்த காவேரி நேற்று மாலை கோவிந்தம்மாளுடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது திடீரென அரிவாளை எடுத்து கோவிந்தமாளை தாக்கி கொலை செய்துள்ளார்.
இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கோவிந்தம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவேரியை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் பகுதியில் வரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.