இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்து விட்டது. ஆன்லைன் மோசடி தொடர்பான செய்திகள் நாள்தோறும் வந்து கொண்டிருப்பதால் பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் வங்கி வாடிக்கையாளர் கணக்கிலிருந்து வங்கி ஊழியர் ஒருவரே பணத்தை திருடியிருப்பது தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மும்பையில் உள்ள எஸ்பிஐ வங்கியில் தினேஷ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவரிடம் ஜானகி என்ற வாடிக்கையாளர் வழக்கமாக விண்ணப்பங்களை எழுதுவது போன்ற வங்கி சேவைக்காக செல்வாராம்.

அதன் பிறகு ஜானகிக்கு  தினேஷ் நெட் பேங்கிங் சேவையையும் ஓபன் செய்து கொடுத்திருக்கிறார். அதன் மூலம் பாஸ்வேர்டை தெரிந்து கொண்டு ஜானகியின் வங்கி கணக்கில் இருந்த 7.5 லட்சம் பணத்தை தினேஷ் திருடி இருக்கிறார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் நெட் பேங்கிங் பயன்படுத்துபவர்கள் எப்போதும் தங்களுடைய பாஸ்வேர்டை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது.