பிக்-அப் மற்றும் வாக்கிங் ETA-களுக்கான திசைகளை உள்ளடக்கிய மேலும் 2 அம்சங்களை Uber பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது. பிக்-அப்பிற்கு 60 நிமிடங்களுக்கு முன் ரைடர்களுக்கு இலவச ரத்து செய்வதற்கான விருப்பம் இருக்கிறது என Uber தெரிவித்து உள்ளது. சவாரியை திட்டமிடும் ரைடர்களும் முன்பதிவு செய்வதற்கு முன்னதாக பயணக் கட்டணத்தை தெரிந்துக்கொண்டு திட்டமிடலாம்.

“Uber Reserve” எனும் புது அம்சத்தை ஊபர் நிறுவனமானது வெளியிடுகிறது. இது பயனாளர்களை 90 தினங்களுக்கு முன்பே வண்டிகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கிறது. இந்த அம்சம் தற்போது அமெரிக்கா மற்றும் கனடாவில் அமலுக்கு வந்துவிட்டது. நேற்று முதல் 90 நாட்களுக்கு முன்னதாகவே சவாரிகளை முன்பதிவு செய்ய Uber Reserve ஐப் பயன்படுத்த உங்களை அனுமதிக்கும் அம்சத்தை நாங்கள் வெளியிடத் தொடங்குகிறோம். ஆகவே முன்கூட்டிய வாகனத்திற்கு ஆகும் செலவை தெரிந்துக்கொண்டு திட்டமிடலாம் என ஊபர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பதிவு இடுகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.