டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மதுபான கொள்கை விவகாரம் தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி கைது செய்யப்பட்டார். கடந்த வாரம் சிபிஐ விசாரணை நிறைவடைந்த நிலையில், மார்ச் 20-ம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது சிறையில் இருக்கும் மணிஷ் சிசோடியாவிடம் சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில்  தற்போது திகார் சிறையில் இருக்கும் மணிஷ் சிஷோடியா அங்கிருந்து ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

அதில் நீங்கள் என்னை கைது செய்து சிறையில் அடைத்து வைத்து தொந்தரவு செய்யலாம். ஆனால் என்னுடைய ஊக்கத்தை ஒருபோதும் நிறுத்த முடியாது. சுதந்திரப் போராட்டத்தின் போது சுதந்திரப் போராட்ட வீரர்களை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கைது செய்து சிறையில் அடைத்த போதும் அவர்களின் ஊக்கம் ஒருபோதும் குறையவில்லை எனக் கூறியுள்ளார். மேலும் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதால் அவர் தன்னுடைய துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.