ஆதார், பான்கார்டு உள்பட பல்வேறு பணிகளை வீட்டிலிருந்த படி ஆன்லைன் வாயிலாக நிறைவேற்ற முடிகிறது. அந்த அடிப்படையில் பாஸ்போர்ட் ஆவணத்தை எவ்வாறு ஈஸியாக பெறுவது என்பது குறித்து நாம் தெரிந்துகொள்வோம். அதன்படி பாஸ்போர்ட் சேவா கேந்திரா ஆன்லைன் போர்ட்டலுக்கு சென்று புதிய பயனர் பதிவு என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதையடுத்து விபரங்களைப் பூர்த்தி செய்த பின், பதிவு என்பதை கிளிக் செய்யவும். தற்போது மீண்டும் உள்நுழைய வேண்டும். “புதிய பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கவும்/பாஸ்போர்ட் மறு வெளியீடு” எனும் இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.

படிவத்தில் தேவையான விபரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின் சந்திப்பை திட்டமிட “View Saved/Submitted Applications” திரையிலுள்ள “Pay and Schedule Appointment” எனும் இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும். விண்ணப்பக் குறிப்பு எண் (ARN) / அப்பாயிண்ட்மென்ட் எண் அடங்கிய விண்ணப்ப ரசீதை பிரிண்ட் “பிரிண்ட் எப்ளிகேஷன் ரசீத்” எனும் இணைப்பிற்கு செல்லவும். பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு செல்லும்போது Appointment Details உடன் ஒரு sms கூட நியமனச் சான்றாக ஏற்றுக்கொள்ளப்படும். கடைசியாக அசல் ஆவணங்களுடன் உடல் சரிபார்ப்புக்கு, சந்திப்பு பதிவு செய்யப்பட்ட பாஸ்போர்ட் சேவா கேந்திரா (பிஎஸ்கே)/மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தை பார்வையிடவும்.