கல்வி சான்றிதழ், ஆதாா், டிரைவிங் லைசன்ஸ் உட்பட பல முக்கிய ஆவணங்களை டிஜிட்டல் முறையில் சேமித்து வைப்பதற்குரிய வசதிகளை டிஜிலாக்கர் எனும் செயலி வழங்கி வருகிறது. டிஜிலாக்கர் சேவைகள் தற்போது வாட்ஸ்அப் வாயிலாக MyGov ஹெல்ப் டெஸ்கில் கிடைக்கும் என்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது தெரிவித்து உள்ளது. உங்களது பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், 10, 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் வாகனத்தின் ஆர்சி (RC) உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை வாட்ஸ்அப் வாயிலாக ஈஸியாக பதிவிறக்கம் செய்யலாம். இவ்வசதியை பெற உங்களது தொடர்புகளில் +91-9013151515 என்ற எண்னை MyGov ஹெல்ப் டெஸ்க் எனும் பெயரில் சேமித்து, அதை வாட்ஸ்அப்-ல் தேட வேண்டும்.
DigiLocker, Namaste (அ) Hi என டைப் செய்து சாட்போட்டை செயல்படுத்தியதும், சாட்போட் உங்களுக்கு கிடைக்கக்கூடிய அப்ஷன்களை காண்பிக்கும். தற்போது உங்களிடம் டிஜிலாக்கர் கணக்கு உள்ளதாக என கேட்டால், ஆம் என்பதை கிளிக் செய்து டிஜிலாக்கர் சேவைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். DigiLocker சேவையை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு நீங்கள் தனியுரிமை கொள்கையை கவனமாக படித்து, அதனை ஏற்றுக்கொள்வதாக ஒப்புதல் அளிக்கவேண்டும்.
அதன்பின் கோரிக்கைக்கு ஏற்ப உங்களது DigiLocker கணக்கை இணைக்க மற்றும் அங்கீகரிக்க உங்களின் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் நீங்கள் OTPஐ பெறுவீர்கள். பின் உங்களின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட ஆவணங்களை ஏற்கவும் பட்டியலிடவும் அதனை உள்ளீடு செய்து கடைசியாக நீங்கள் பதிவிறக்க விரும்பும் ஆவணத்தை கிளிக் செய்ய வேண்டும். அந்த ஆவணமானது உங்கள் WhatsApp வழியாக பதிவிறக்கம் செய்யப்படும்..