இந்தியாவைச் பூர்வீகமாகக் கொண்டு லண்டனில் நடிகராக வலம் வரும் ஷிவ் க்ரூவல் (Shiv Grewal), தனது வாழ்வில் நேர்ந்த மரணத்தின் விளிம்பு வரையான ஒரு சிலிர்க்க வைக்கும் அனுபவத்தைப் பொதுவெளியில் பகிர்ந்துள்ளார்.  கடந்த 2013ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது மனைவியுடன் மதிய உணவு அருந்திக் கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென கடுமையான மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரது இதயம் இயங்குவது நின்றுபோய், சுமார் 7 நிமிடங்கள் வரை அவர் உயிர் பிரிந்த நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

அந்தச்  தருணத்தில் தனது ஆன்மா தனது உடலைவிட்டு வெளியேறிவிட்டதாக உணர்ந்ததாக அவர் விவரித்துள்ளார். ஒரு காற்று போல இலகுவாக மாறியதாகவும், தண்ணீரில் மிதப்பது போன்ற ஒரு வித்தியாசமான அமைதியான உணர்வு தனக்கு ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தனது பயணம் அப்படியே விண்வெளியை நோக்கி நகர்ந்து, அங்கு விண்கற்களையும் நிலவையும் தன் கண்களால் கண்டதாகவும் அவர் ஆச்சரியத்துடன் குறிப்பிட்டார்.

பின்னர் மருத்துவக் குழுவினரின் துரிதமான மற்றும் தீவிரமான சிகிச்சையின் மூலமாக அவர் மீண்டும் மீட்கப்பட்டுத் தனது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினார். தனக்குக் கிடைத்த இந்த இரண்டாவது வாழ்க்கையை மிகவும் நன்றியுடன் பார்ப்பதாகவும், ஆனால் மரணத்தின் விளிம்பில் தான் உணர்ந்த அந்தத் தருணங்கள் தனது வாழ்நாளில் எப்போதுமே மறக்க முடியாதவை என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இவரின் இந்தப் பேட்டியானது தற்போது உலக அளவில் பலரையும் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளதுடன், சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.