தமிழக முதல்வர் ஸ்டாலின் தினமும் வாக்கிங் செல்வது வழக்கம். அதன் பிறகு முதல்வர் ஸ்டாலினுக்கு தற்போது 69 வயது ஆன நிலையிலும் தினமும் உடற்பயிற்சியும் செய்வார். முதல்வர் ஸ்டாலின் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் கூட அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் தற்போது முதல்வர்  ஸ்டாலின் மேல் சட்டை அணியாமல் ஜம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை பார்த்த சில நெட்டிசன்கள் முதல்வரை விமர்சித்து வருகிறார்கள்.

ஆனால் சிலர் முதல்வர் ஸ்டாலின் இயல்பாக ஜிம்மில் உடற்பயிற்சி செய்கிறார். உடற்பயிற்சி செய்யும் போது மேல் சட்டை அணியாமல் செய்தால் என்ன தவறு இருக்கிறது என்றும் சிலர் ஆதரவாக பேசி வருகிறார்கள். மேலும் எந்த ஒரு முதல்வரும் செய்ய தயங்கும் விஷயத்தை நம்முடைய தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தைரியமாக செய்ததோடு அதை வீடியோவாக எடுத்து மற்றவர்களையும் ஊக்குவிக்கும் விதமாக சமூக வலைதளங்களில் வெளியிட்டது மிகவும் பாராட்டுக்குரிய விஷயம் என்றே பலரும் பாராட்டி வருகிறார்கள்.