தமிழகத்தில் ஆதரவின்றி தவிக்கும் முதியோர்களுக்காக சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அரசு உதவித்தொகை வழங்கி வருகின்றது. அதன் மூலம் அறுபது வயதை கடந்த முதியோர்கள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவி தொகை பெற்று பயனடைந்து வருகிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் கடந்த வருடங்களில் ஒரு சிலருக்கு உதவி தொகை ரத்து செய்யப்பட்டதால் முதியவர்கள் பொருளாதார ரீதியாக சிரமத்திற்கு ஆளாகினர்.

இதனைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு உதவி தொகை நிறுத்தப்பட்டவர்களுக்கு மீண்டும் உதவி தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் உதவித்தொகை பெற தகுதி பெற்ற நபர்கள் கண்டறியப்பட்டு இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் முதியோர்களின் உதவித்தொகை குறித்து அமைச்சர் பெரியசாமி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது தமிழகத்தில் 60 வயதை தாண்டி அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை இனி வீடு தேடி வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.