இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி கடந்த சனிக்கிழமை (ஜன. 31) திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் சொந்த மண் வீரரான சஞ்சு சாம்சன் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. துரதிர்ஷ்டவசமாக அவர் 6 ரன்களில் ஆட்டமிழந்தாலும், களத்தில் அவர் செய்த ஒரு செயல் ரசிகர்களின் மனதை வென்றுள்ளது. ஆட்டத்தின் போது பவுண்டரி எல்லைக்கு அருகே பீல்டிங் செய்து கொண்டிருந்த சஞ்சு சாம்சன், அங்கு அமர்ந்திருந்த ஒரு சிறுவனிடம் (Ball Boy) மிகவும் சகஜமாகப் பேசிக்கொண்டிருந்தார்.
Sanju Samson talking to a ball boy during the IND vs NZ 5th match. pic.twitter.com/C578G3Uftl
— Sonu (@Cricket_live247) February 2, 2026
“>
தனது ஊர் பையன் என்பதால் அவரிடம் மலையாளத்தில் நலம் விசாரித்த சஞ்சு, அந்தச் சிறுவனுக்கு சில அறிவுரைகளையும் வழங்கி உற்சாகப்படுத்தினார். இக்கட்டான ஆட்டச் சூழலிலும், உள்ளூர் சிறுவனுடன் அவர் காட்டிய இந்த எளிமையான அணுகுமுறை மற்றும் மனிதநேயம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, “கேரளா சேட்டா எப்போதும் மாஸ் தான்” என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
