அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு யும்கென் பக்ரா என்பவர் கைது செய்யப்பட்டார். அதாவது இவர் அரசு நடத்தும் ஒரு பள்ளியில் படிக்கும் 21 மாணவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன்படி 6 சிறுவர்கள் மற்றும் 16 மாணவிகள் உட்பட 21 பேரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து வெளியே சொல்லக்கூடாது என அவர் மாணவர்களை மிரட்டியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட 6 குழந்தைகள் தற்கொலை செய்யும் முயற்சி செய்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர். கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பள்ளியில் படிக்கும் இரட்டை குழந்தைகளை வார்டன் பாலியல் வன்கொடுமை செய்ததாக குழந்தைகளின் தந்தை புகார் கொடுத்த நிலையில் அவர் செய்த குற்றங்கள் வெளியே தெரிய வந்தது.
மாநிலத்தையே இந்த சம்பவத்தில் அந்த மாநில நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கிய நிலையில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் 6 முதல் 14 வயதுடைய 6 சிறுவர்கள் மற்றும் 15 வயதிலேயே மாணவிகளை சீரழித்துள்ளார்.
மேலும் பள்ளியில் நற்பெயர் கேட்டு விடும் என்பதால் குற்றத்தை வெளியே சொல்லாத தலைமை ஆசிரியர் மற்றும் இந்திய ஆசிரியர்கள் 20 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
