சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ காண்போரை உறைய வைத்துள்ளது. அந்த வீடியோவில், ஒருவர் தனது மனைவியின் கல்லறையின் மீது நின்று கொண்டு, ஆக்ரோஷமாகத் தடியால் அடிப்பதோடு, கதறி அழுகிறார். சமீபத்தில் உயிரிழந்த தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு, தனது 6 குழந்தைகளுக்கும் அந்த நபர் டிஎன்ஏ (DNA) பரிசோதனை செய்துள்ளார். அதன் முடிவுகள் வந்தபோது அவர் நிலைகுலைந்து போனார். பரிசோதனை செய்யப்பட்ட 6 குழந்தைகளில் ஒருவர் கூட அவருக்குப் பிறக்கவில்லை என்ற உண்மை அம்பலமானது.

​இந்தத் துரோகத்தைத் தாங்க முடியாமல், ஆத்திரமும் வலியும் பீறிட அந்த நபர் கல்லறையைத் தடியால் அடித்து தனது குமுறலை வெளிப்படுத்துகிறார். இந்த வீடியோ ‘எக்ஸ்’ (X) தளத்தில் தீயாய் பரவி வரும் நிலையில், நெட்டிசன்கள் மத்தியில் இது ஒரு பெரிய விவாதத்தையே கிளப்பியுள்ளது. சிலர் அந்த நபரின் வலியைப் புரிந்து கொண்டாலும், ஒரு தரப்பினர் இறந்தவரின் கல்லறையை இப்படி அவமதிப்பது தவறு எனச் சொல்லி வருகின்றனர். இந்தச் சம்பவம் எங்கு நடந்தது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், உறவுகளுக்கு இடையிலான ‘நம்பிக்கை’ குறித்து இது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.