தன்னுடைய மனைவியை இரண்டாவது திருமணம் செய்துள்ளார் இந்தி நடிகர் ரோனித் ராய். ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூமி திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியவர் தான் இவர். தன்னுடைய இருபதாவது திருமண நாளை இவர் கொண்டாடிய நிலையில் அந்த நாளில் கோவாவில் உள்ள கோவிலில் தன்னுடைய மனைவி ஜொன்னா நீலம் என்பவரை மீண்டும் திருமணம் செய்துள்ளார்.

இதில் இந்தி திரையுலகினர் பலரும் கலந்து கொண்டு இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தனர். திருமண நாளை வித்தியாசமான முறையில் கொண்டாடிய இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.