வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்த திரைப்படம் விடுதலை. இந்த படத்தின் முதல் பாகம் இந்த வருடம் மார்ச் மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த வருடம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரோட்டர்டேம் சர்வதேச திரைப்பட விழாவில் விடுதலை படத்தின் இரண்டு பாகங்களும் திரையிட தேர்வாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் இரண்டாம் பாகம் தியேட்டரில் வெளியாகும் முன்பே சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட இருப்பது குறிப்பிடத்தக்கது.