இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி பார்ப்பவர்களை, குறிப்பாக தமிழக வெற்றிக் கழக (TVK) தொண்டர்களையும் நடிகர் விஜய்யின் ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த காணொளியில் முதலில் 500 ரூபாய் நோட்டு காட்டப்படுகிறது. அதில் திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதி, முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்கள் இருப்பது போலவும், “ரிசர்வ் பேங்க் ஆஃப் டிஎம்கே” என்று குறிப்பிடப்பட்டும் உள்ளது. இந்தக் காட்சி பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தியதோடு, அரசியல் கிண்டலாகவும் அமைந்துள்ளது.

பின்னர், காணொளியில் அந்த நோட்டுகள் அழிக்கப்பட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி நிறங்களான மஞ்சள், சிவப்பு, கருப்பு ஆகியவை 500 ரூபாய் நோட்டுக்கு பூசப்படுகிறது. இறுதியாக, “உங்கள் வாக்குகளை விற்காதீர்கள்” என்ற வாசகம் காட்டப்படுகிறது. இந்தக் காணொளி தமிழக வெற்றிக் கழகத்துக்கு சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விளம்பரமாக அமைந்துள்ளது. TVK தொண்டர்களும் விஜய் ரசிகர்களும் இதைப் பகிர்ந்து, கட்சியின் கொள்கையை பரப்பி வருகின்றனர்.