தமிழக அரசியல் களத்தில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய், சென்னை கொளத்தூரில் நடத்திய பரப்புரை தற்போது பெரும் சட்டச் சிக்கலில் முடிந்துள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறி, விஜய் மீது 5 வெவ்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

500 பேர் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்று கூறி அனுமதி பெற்றுவிட்டு, விதிகளை மீறி சுமார் 5,000-க்கும் மேற்பட்டோரைத் திரட்டியதாக அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ​மேலும், 5 ஒலிபெருக்கிகளுக்கு மட்டுமே அனுமதி பெறப்பட்ட நிலையில், சுமார் 30-க்கும் மேற்பட்ட ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தி அதிக சத்தம் எழுப்பியதும் இந்த வழக்கில் முக்கியக் காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜய்யின் அரசியல் வருகை ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த அடுத்தடுத்த விதிமீறல் புகார்கள் மற்றும் போலீஸ் நடவடிக்கை அவரது தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்கு முன்பே விஜய் மீதான இந்தச் சட்ட நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.