அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இந்தியத் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், $300 பில்லியன் (சுமார் 25 லட்சம் கோடி ரூபாய்) மதிப்பீட்டில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்கவுள்ளதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முதலீடு குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, “கடந்த 50 ஆண்டுகளில் அமெரிக்க மண்ணில் ஒரு புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த பிரம்மாண்ட திட்டம் அமெரிக்காவிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். இதன் மூலம் அமெரிக்காவின் எரிசக்தித்
இந்தத் திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த முதலீடு இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. அமெரிக்காவில் பல தசாப்தங்களாகப் புதிய சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படாத நிலையில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த வரவு அந்நாட்டின் உள்நாட்டு எரிபொருள் தேவையைக் குறைப்பதோடு, ஏற்றுமதி வாய்ப்புகளையும் அதிகரிக்கும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.
முன்னதாக, அதிபர் டிரம்ப் மற்றும் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி சந்தித்துப் பேசிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டம் அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஒரு புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
