புதுடெல்லியில் உள்ள ஷகுர் பஸ்தி இரயில்வே யார்ட் பகுதியில், 25 வயதுடைய இளம்பெண்ணின் சடலம் ஜனவரி 25 அன்று கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் ரஷ்மி என தெரியவந்தது. அவர் 21 வயது பாண்டவ் குமார் என்பவரை காதலித்து வந்ததாகவும், சமீபத்தில் இருவரும் பிரிந்துள்ளதாகவும் தெரியவந்தது.

இதனையடுத்து கடைசியாக உன்னை ஒரு முறை பார்க்க வேண்டும் என கூறி காதலியை அழைத்த பாண்டவ், அவரை 50 முறை கத்தியால் குத்தி கொலை செய்து கண்களில் கத்தியை வைத்து குத்தி பிடுங்கி கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர் சிசிடிவி கேமராவின் உதவியுடன் பாண்டவை போலீசார் கைது செய்துள்ளனர்.