என் மண் என் மக்கள் யாத்திரையில் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, ஜெகத்ரட்சகன் தி.மு.கவுடைய எம்.பி வீட்டில ரைடு போச்சு. ஒரு வாரமாக பார்த்தீங்களா ? ஆனால் ரெய்டுல  என்ன புடிச்சாங்கன்னு பாத்தீங்களா ? அத போட மாட்டாங்க…  அதை யாரும் சொல்ல மாட்டாங்க…. நான் சொல்றேன் உங்களுக்கு… இன்கம் டேக்ஸ் ஒரு செய்தி குறிப்பு வெளியிட்டு இருக்காங்க. மீடியால அதை போடல. என்ன புடிச்சாங்கன்னு  நான் சொல்றேன், கேளுங்க…

5 விஷயங்கள் புடிச்சிருக்கிறாங்க. இதை நீங்க எல்லாருமே கவனமா கேட்கணும். தமிழக அரசியல் ஏன் மாற்றப்பட வேண்டும் ? என்பதை நீங்க கவனமாக கேட்கணும். ஜெகத்ரட்சகன் கிட்ட இருந்து கைப்பற்றப்பட்டது என்ன என்றால் ? ஒரு வாரம் 100 இடத்தில் ரெய்டு  பண்ணாங்க.. முதலில் கைப்பற்றப்பட்டது அவர் நடத்தக்கூடிய தனியார் மருத்துவக் கல்லூரியில டொனேஷன்ல சீட்டு வித்ததற்கான போலி ரசீது 400 கோடி ரூபாய்.

போலி ரசீது 400 கோடி. போலீஸ் ஸ்காலர்ஷிப் கொடுத்ததாக 25 கோடி. நான் சொல்றத கணக்கு வச்சுக்கோங்க… 425 கோடி. அவர் நடத்தக்கூடிய சாராய ஆலையில இந்த சாமானை எல்லாம் ராமெட்டிரியலாக வாங்கினேன் என்று பொய் கணக்கு காட்டியது 500 கோடி. ஸ்டாக் ரிஜிஸ்டர்ல அது கிடையாது. நீங்க எல்லாம் ஸ்டாக் ரெஜிஸ்டர்னா புரிஞ்சுக்குவீங்க.  நான் சாராயம் தயாரிக்கறதுக்கு இதெல்லாம் வாங்கினேன்.  ஆனால்  ஸ்டாக் ரிஜிஸ்டர்ல அது இல்ல, 500.

கோடி 4௦௦ கோடி +  25 கோடி = 425 கோடி + 5௦௦ கோடி =  925 கோடி. 300 கோடி ரூபாய் அவருடைய ட்ரஸ்டுல இருக்கக்கூடிய பணத்தை தனிப்பட்ட செலவுக்காகவும்,  ஹைதராபாத்தில் ஒரு தனியார் நிறுவனம் வாங்குவதற்காக 300 கோடி ரூபாய் தவறாக பயன்படுத்திருக்கிறார்.  கணக்கு நீங்களே பாருங்க..  925 கோடி + 300 கோடி = 1225 கோடி ரூபாய் வரி ஏய்பு.

இதை டிவில போட மாட்டேங்குறாங்க…  பத்திரிக்கையில் போட மாட்டேங்குறாங்க.. இன்கம் டேக்ஸ் ரெய்டு முடிச்சதுக்கு அப்புறம் செய்தி குறிப்பா கொடுத்திருக்கு…  இத்தனை இடத்துல ரெய்டு பண்ணுனோம்…  இதெல்லாம் பிடித்திருக்கிறோம் என்று… நம்முடைய பாரத ஜனதா கட்சி ரிலீஸ் செய்த DMK files பார்ட் ஒன்ல ஜெகத்ரட்சகனுடைய சொத்து மட்டுமே 51 ஆயிரம் கோடி ரூபாய் நாம காட்டி இருக்கின்றோம். 51 ஆயிரம் கோடி தமிழகத்தின் உடைய  வருஷ பட்ஜெட்டுல 8இல் ஒரு பங்கு அது என தெரிவித்தார்.