டெல்லி நொய்டாவில் வசித்து வரக்கூடிய 12-ம் வகுப்பு மாணவி ஒருவர், சென்ற 5 மாதங்களாக தன் நண்பர்கள் 3 பேரால் பலமுறை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார். அதோடு அதனை வீடியோவாக பதிவுசெய்த மாணவியின் நண்பர்கள், இதுகுறித்து யாரிடமாவது சொன்னால் வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்துவிடுவதாக மிரட்டி உள்ளனர். மேலும் மாணவியை குடும்பத்தோடு கொலை செய்து விடுவதாக நண்பர்கள் மிரட்டி உள்ளனர்.
அந்த 3 பேரும் அவர்களது நண்பர்களுக்கு மாணவியை விருந்தாக்க நினைத்து உள்ளனர். இதன் காரணமாக மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற மாணவியை அவரது சகோதரி துரிதமாக செயல்பட்டு காப்பாற்றியுள்ளார். இதையடுத்து இவ்விவகாரம் பற்றி மாணவி பெற்றோரிடம் கூறியுள்ளார். பின் இது பற்றி பெற்றோர் அளித்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாகவுள்ள 3 பேரையும் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.