கடலூர் மாவட்டத்தில் உள்ள எழுத்தூர் கிராமத்தில் செல்லப்பன், முத்தையா, மருதமுத்து ஆகியோர் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் சேனைக்கிழங்கு, நெல், மக்காச்சோளம், கரும்பு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் கரும்பு தோட்டத்திற்கு மேலே சென்ற மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பொறி பறந்தது. இதனால் கரும்பு பயிரில் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.
இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கரும்பு தோட்டத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் 5 ஏக்கர் கரும்பு பயிர்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.