சமீபத்தில் வெளியான தகவலின் படி ஸ்மார்ட் போன் பையனர்களுக்கான புதிய விதியை இந்திய அரசு அமல்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. இந்த புதிய விதியின் படி இந்தியாவில் உள்ள ஸ்மார்ட்போன் பயனர்கள் கண்டிப்பாக அவர்களது ஸ்மார்ட் ஃபோன்களை ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

ஐபோன் ஆண்ட்ராய்டு என எந்த ஸ்மார்ட்போனாக இருந்தாலும் சரியாக ஐந்து வருடங்கள் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். இந்திய அரசாங்கம் இதில் நேரடியாக தலையிட்டு மக்கள் கையில் உள்ள பழைய ஸ்மார்ட்போன்களை மாற்ற அறிவுறுத்தவுள்ளது. வருடங்கள் செல்ல செல்ல ஸ்மார்ட்போன்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சின் அளவு அதிகரிப்பதாகவும் இதனால் தான் புதிய ஸ்மார்ட்போனுக்கு மாற வேண்டும் என்று அறிவுறுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

உங்கள் ஸ்மார்ட்போனில் கதிர்வீச்சி வெளியாகும் அளவை தெரிந்து கொள்ள *#07# என்ற எண்ணிற்கு அழைத்தால் SAR Value காட்டும் இது 1.6w/kg என்பதற்கு மேல் காட்டினால் அந்த ஸ்மார்ட் போனை மாற்றுவதற்கு அறிவுறுத்தப்படுகிறது. இதுபோன்று அதிக கதிர்வீச்சு வெளியாகும் ஸ்மார்ட்போனை உபயோகப்படுத்துவதால் உடல் நலக் கோளாறுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.