பொதுவாகவே வீட்டில் வேலை செய்யும் பலரும் மதிய நேரத்தில் ஒரு குட்டி தூக்கத்தை போடுவார்கள். வேலை செய்யும் இடத்தில் கூட இருந்த இடத்தில் அப்படியே தூங்கி விடுவார்கள். இது போன்ற நேரத்தில் அவர்களின் வேலை சரியாக செய்ய முடியாத ஒரு சூழல் ஏற்படும். ஆனால் இப்படி தூங்குவது உடலுக்கு நன்மை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதாவது மதிய உணவுக்குப் பிறகு சுட்டி தூக்கம் போடுவது அறிவாற்றல் செயல்பாடுகளை மேம்படுத்தும். இது உடலுக்கு ஒரு வகை சக்தியை அளிக்கும்.

இரவு நேரத்தில் போதுமான தூக்கம் இல்லாமல் இருந்தால் உடல் சோர்வு மற்றும் மனநிலை மாற்றம் உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் பகலில் சிறிது நேரம் தூங்குவது சிறந்தது. பகல் வேளையில் தூங்கினால் ஒரு வகையான உற்சாகம் ஏற்படும். பலரின் கண்களுக்கு கீழே கருவளையம் இருக்கும். இவ்வாறு இருப்பவர்கள் ரசாயனம் கலந்த கிரீம்களை பயன்படுத்தாமல் இரவில் எட்டு மணி நேரம் சரியாக தூங்கினால் கருவளையம் மறைந்து விடும். குடும்பமாக இருக்கும்போது மதிய வேளையில் ஒரு எரிச்சல் மற்றும் கடுப்பு ஏற்படக்கூடும்.

அப்போது நன்றாக சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் ஓய்வில் இருப்பது சிறந்தது. தூங்குவதால் மூளை ஓய்வில் இருக்கும். இப்படி ஓய்வில் இருக்கும் போது வேலை செய்யும் போது நியாபகம் சக்தி அதிகமாக இருக்கும். மதிய நேரத்தில் தூங்கும் போது இடது பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்க வேண்டும். இப்படி தூங்கினால் உணவு செரிமானத்திற்கு உதவியாக இருக்கும். குறிப்பாக சாதாரண நபர்கள் பத்து முதல் 30 நிமிடங்கள் வரை மட்டுமே மதிய நேரத்தில் தூங்க வேண்டும். அதே சமயம் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் 90 நிமிடங்கள் வரை தூங்கலாம். மேலும் மதியம் ஒரு மணி முதல் மூன்று மணிக்கு முன்பாக தூங்கி எழுவது சிறந்ததாகும்.