பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே டெடி பேர் என்பது மிகவும் பிடிக்கும். குண்டு கண்கள் பெரிய முக்கு நீளமான காது என்று பஞ்சால் செய்யப்பட்டிருக்கும் ஒரு அழகான கரடி பொம்மைதான் டெடி பியர் இந்த டெடி பியரை உங்களுக்கு பிடிக்கும் என்றால் நீங்கள் கண்டிப்பாக அமெரிக்க அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். டெடி பியர் உருவாவதற்கு காரணமே இவர்தான். அமெரிக்காவின் 26வது ஜனாதிபதியாக இருந்தார். இவர் வேட்டையாடுவதில் அதிக பிரியம் கொண்டவர். 1902 ஆம் வருடம் நவம்பர் மாதம் அவர் ஜனாதிபதியாக பதவி வகித்தார். அப்போது மிஷிசிப்பி மாகாண கவர்னர் வேட்டையாட செல்லலாம் என்று அவரை வற்புறுத்த இவரும் சம்மதித்தார்.

அந்த நாட்களில் அமெரிக்காவில் கரடி வேட்டையாடினால் சிறந்த வேட்டைக்காரன் என்று அனைவராலும் புகழப்படுவது வழக்கம் . ஒரு வேட்டைக்கார கும்பலோடு ரூஸ்வெல்ட் வேட்டையாட காட்டுக்குப் புறப்பட்டார். காட்டில் தனுடன் வந்தவர்கள்  வேட்டையாட சென்றார்கள். ஆனால் ஒரு கரடியும் கண்ணில்  சிக்கவில்லை. இதனால் ரூஸ்வெல்ட் சோர்வடைந்தார் அவர் ஏமாற்றம் அடைந்து விடக்கூடாது என்று கருதியை வேட்டைக்கார கும்பல் எங்கிருந்தோ ஒரு வயதான கரடி பிடித்து வந்து மரத்தில் கட்டிப்போட்டு இந்த கரடியை சுடுங்கள் என்று கூறினார்கள்.

இதை பார்த்த ரூஸ்வெல்ட் நீங்கள் பிடித்து வந்த கரடி நான் சுட்டால் எனக்கு கெட்ட பெயர் கிடைக்கும். அது மட்டுமல்லாமல் அந்த கரடி பாவம் அதற்கு வயதாகிவிட்டது .அதை விடுங்கள் என்றார். அடுத்த நாளை வாஷிங்டன் பத்திரிகை ஒன்று இந்த சம்பவம் ஒரு காட்டுனாக பரப்பியது.  அதில் அவர் ஒரு கரடி கயிற்றால் கட்டி இருப்பது போல அதை சுடாமல் ரூஸ்வெல்ட் திரும்பிச் செல்வது போல அந்த கார்ட்டூன் வரையப்பட்டிருந்தது . இது வைரலாக பரவியதை அடுத்து இந்த சம்பவத்தை மனதில் கொண்டு .மோரிஸ் மைக் டாம் என்ற பொம்மை செய்து விற்கும் வியாபாரி பஞ்சால் செய்யப்பட்ட ஒரு அழகான கரடி பொம்மையை செய்தார்.

அந்த பொம்மையை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் தியோட ரூஸ்வெல்ட் பெயரில் கரடி பொம்மை செய்துவிட்டால் நல்ல லாபம் வரும் என்று எண்ணிய மோரிஸ் மைக் டாம்  ரூஸ்வெல்ட்க்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் நான் ஒரு கரடி பொம்மை செய்யலாம் என்று நினைக்கிறேன். அதில் உங்களுடைய சம்பவத்தை குறிக்கும் விதமாக உங்கள் பெயரையும் கரடியின் பெயரை இணைத்து ஒரு பெயர் வைக்க இருக்கிறேன். அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறினார். அப்படியானால் என் புனை பெயரான டெடி என்ற பெயரை இணைத்து உங்கள் கரடி பொம்மைக்கு பெயர் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். மோரிஸ் மைக் தாமும் தன்னுடைய கரடி பொம்மைக்கு டெடி பியர் என்று பெயர் வைத்தார். அன்று பிறந்த இந்த டெடிபியர் தான் இன்றும் குழந்தைகளின் கனவு உலகமாக  இருக்கிறது.