உத்திரபிரதேசம் மாநிலத்தில் 12 வயது சிறுவனின் தொண்டையில் சிக்கிய நாணயத்தை ஏழு வருடங்களுக்கு பிறகு அறுவை சிகிச்சை மூலமாக மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். அன்குல் என்ற சிறுவன் ஐந்து வயதாக இருக்கும் போது ஒரு ரூபாய் நாணயத்தை விழுங்கியுள்ளான்.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் சிறுவனுக்கு தொண்டை வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது தொண்டையில் நாணயம் சிக்கி இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து தொலைநோக்கி அறுவை சிகிச்சை முறையை பயன்படுத்தி மருத்துவர்கள் நாணயத்தை அகற்றினர். தற்போது சிறுவன் நலமாக உள்ளான்.