
உத்திரபிரதேசம் மாநிலத்தில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மவு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி டியூஷனுக்கு சென்று படித்துள்ளார். இந்த சிறுமி வழக்கம் போல் கடந்த செவ்வாய்க்கிழமை டியூஷனுக்கு சென்றார். அப்போது டியூஷன் மாஸ்டர் சிறுமி என்று கூட பாராமல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனால் சிறுமியின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதன்பின் தனக்கு நடந்த சம்பவம் தொடர்பாக சிறுமி தன் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதை தெரிந்து கொண்ட டியூஷன் மாஸ்டர் தலைமறைவாகிவிட்டார். மேலும் அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.