நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகரில் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் அதிக அளவிலான மழை என்பது பதிவாகியுள்ளது. வரலாறு காணாத அளவில் மழை என்பது பதிவாகியுள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களில் இருக்கக்கூடிய நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் இந்த 5 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் இந்த 5 மாவட்டத்தில் மின்கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் என்பது வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த 5 மாவட்டங்களில் அதிகனமழை காரணமாக பல்வேறு இடங்களில் தற்போது மின் தடை ஏற்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மின்தடை என்பது ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டுள்ளது. எனவே குறிப்பிட்ட இந்த ஐந்து மாவட்டங்களில் மட்டும் மின் கட்டணம் செலுத்து அவகாசம் என்பது வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் 5 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு களத்தில் உள்ளனர்.

மேலும் தொடர்ந்து 4 அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக 9 அமைச்சர்கள் களத்தில் மீட்பு  பணிகளை திருத்தப்படுத்தி வருகின்றனர். மேலும் கடலோர காவல் பாதுகாப்பு படையினர் அவர்களும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த 5 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மின்தடை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் 5 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் என்பது நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 20ஆம் தேதி வரை தாமத கட்டணமின்றி மின் கட்டணம் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இன்றும், நாளையும் செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை டிசம்பர் 20 வரை தாமதக் கட்டணம் இன்றி செலுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது