
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் கடந்த 25-ஆம் தேதி பதான் திரைப்படம் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள நிலையில், ஷாருக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படம் இந்தியா முழுவதும் 8000 திரையரங்குகளில் ரிலீசான நிலையில், 4 நாட்கள் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி பதான் திரைப்படம் 4 நாட்களில் 402 கோடிக்கும் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. இதைத்தொடர்ந்து தற்போது பதான் திரைப்படத்தின் 5 நாட்கள் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி உலக அளவில் பதான் திரைப்படம் 550 கோடி வரை வசூல் புரிந்துள்ளது. இந்த தகவல் ஷாருக்கான் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பாலிவுட் சினிமாவில் சமீபத்தில் வெளியான திரைப்படங்கள் எதுவும் போதிய வரவேற்பை பெறாத நிலையில், தற்போது ஷாருக்கானின் பதான் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வசூல் சாதனை புரிந்து வருவது திரையுலக பிரபலங்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதோடு பதான் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக நடிகர் ஷாருக்கானின் வீட்டின் முன்பாக ஏராளமான ரசிகர்கள் திரண்ட நிலையில், அது தொடர்பான வீடியோவை ஷாருக்கான் தன்னுடைய twitter பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
Mehmaan Nawaazi Pathaan ke ghar par… Thank u all my Mehmaans for making my Sunday so full of love. Grateful. Happy. Loved. pic.twitter.com/ivfpK07Vus
— Shah Rukh Khan (@iamsrk) January 29, 2023