டைரக்டர் ராஜு துசா எழுதி இயக்கி இருக்கும் படம் “ஒன்றல்ல ஐந்தே நிமிடம்”. இந்த படத்தை ருத்ரன்ஷ் செல்லுலாய்ட்ஸ் சார்பாக பொம்மக் சிவா தயாரித்து உள்ளார். ஹன்சிகா நடிப்பில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தின் கால அளவு 1 மணிநேரம் மற்றும் 45 நிமிடங்கள் ஆகும். இந்நேரத்தை ஒரே ஷாட்டில் சுவாரசியமான முறையில் படமாக்கி இருக்கின்றனர்.

சைக்கலாஜிக்கல் த்ரில்லர் ஆக உருவாகி இருக்கும் இப்படத்துக்கு சாம் சிஎஸ் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் டிரைலரை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளது. இத்திரைப்படம் தெலுங்கு மற்றும் பிற மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.