தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் நானி தற்போது ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் தற்போது தசரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சமுத்திரகனி, பூர்ணா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள நிலையில் அண்மையில் படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இதைத்தொடர்ந்து தற்போது தசரா படத்தின் டீசர் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை தமிழில் நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். மேலும் நானி சரக்குக்கு நாங்க அடிமை இல்லை ஊறிப்போன சம்பிரதாயத்துக்கு தான் என தெறிக்கவிடும் வசனங்களை பேசியுள்ளார். இந்த டீசர் வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.