ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மீண்டும் மோதல் போக்குத் தொடங்கியுள்ளதால், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த திடீர் அரசியல் பதற்றம், உலகளாவிய எரிபொருள் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக, சர்வதேசச் சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 2 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து, ஒரு பீப்பாய் 90.15 டாலராக அதிகரித்துள்ளது. அதேபோல், அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய் விலையும் 1.10 சதவீதம் உயர்ந்து, ஒரு பீப்பாய் 84.32 டாலராக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை இப்படித் தொடர்ந்து உயர்ந்து வருவதால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு (எல்.பி.ஜி) உருளைகளின் விலைகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விலை உயர்வு இந்தியப் பொருளாதாரத்திலும், சாமானிய மக்களின் அன்றாடப் செலவுகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.
