உத்திர பிரதேச மாநிலம், பஸ்தி மாவட்டத்தில், ஹராயா காவல் நிலையத்திற்கு உட்பட்ட அமரி பஜாரில் 5 மாத கைக்குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து தாயே கொன்ற கொடூரமான ஒன்று சம்பவம் நடந்துள்ளது. அந்த பெண்ணின் மாமியார் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றிருந்தனர்.

இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத சமயம் அந்த பெண் தனது மகளை வீட்டின் மேல் உள்ள தண்ணீர் தொட்டியில் வீசியுள்ளார். போலீசார் அந்த பெண்ணை கைது செய்தனர். மேலும் மாமியாரிடம் விசாரித்த போது மருமகளுக்குப் பேய் பிடித்திருப்பதாக கூறினார்.