இந்திய விமான நிலைய ஆணையத்தில் (ஏஏஐ) வேலைவாய்ப்புக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.
பொறியியல் பட்டதாரி தகுதித் தேர்வு (கேட்) மூலம் 490 ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கேட் 2024 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க மே 1 கடைசி நாள்.
மேலும் விவரங்களுக்கு aai.aero அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்.