தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை DMK files என்ற பெயரில் திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இது தமிழக அரசியலில் தற்போது பூதாகரமாக வெடித்து ஒருவருக்கொருவர் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் அண்ணாமலை அவதூறு பரப்புவதாகவும் திமுகவினர் இழப்பீடு கேட்டு வருகின்றனர். அந்தவகையில் ரூ.100 கோடி இழப்பீடு கோரி பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு திமுக எம்பி TRபாலு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்ட அண்ணாமலை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடரப்படும் எனவும் எச்சரித்துள்ளார். முன்னதாக, நேற்று இதேபோல் அண்ணாமலைக்கு 50 கோடி இழப்பீடு கோரி உதயநிதி நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.