பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நவால் கிஷோர் என்பவருக்கும் உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மனிஷா குமாரி என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்த நிலையில் இவரது வீட்டிலும் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்ததால் திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு கிஷோர் குடும்பத்தினர் திருமணத்தை மீண்டும் செய்து வைக்க முன்வந்த போது மணிஷா குமாரியின் வீட்டில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து விட்டனர். இந்நிலையில் கிஷோர் மற்றும் மனிஷா நெருங்கி பழகியதால் அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக 450 கிலோமீட்டர் தூரம் கிஷோர் பைக்கில் பயணித்து மனிஷாவை தன்னுடைய சொந்த ஊருக்கு அழைத்து வந்து குடும்பத்தினர் முன்னிலையில் ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளார். மேலும் கிஷோரின் குடும்பத்தினர் திருமணத்திற்கு சம்மதித்து விட்ட நிலையில் மனிஷாவின் குடும்பத்தினர் மட்டும் சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனால் தங்களுடைய காதலில் உறுதியாக இருப்பதால் மனிஷா தான் கிஷோருடன் தான் வாழ்வேன் என்று கூறியுள்ளார்.