இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் அடிப்படையில், மக்கள் தங்களது ஆதார் கார்டுகளை வங்கி கணக்குகள் மற்றும் மொபைல் எண்களுடன் இணைக்கவேண்டும் என கூறியுள்ளது. இதற்கிடையில் ஆதார் கார்டை பயன்படுத்தி வங்கி இருப்பை சரிபார்க்க இணையவசதி தேவையில்லை. இச்சேவையின் வாயிலாக மூத்தகுடிமக்கள், ஸ்மார்ட்போன்கள் இல்லாதவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வங்கி கிளைக்கு போகாமலேயே தங்களது வங்கி விவரங்களை சரிபார்த்துக்கொள்ள இயலும்.

ஆதார் வாயிலாக வங்கிக்கணக்கு இருப்பை சரிபார்ப்பது எப்படி?

# உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து *99*99*1#-ஐ டயல் செய்ய வேண்டும்.

# அதன்பின் உங்களது ஆதார் கார்டில் 12 இலக்க எண்ணை உள்ளிடவும்.

# உங்கள் ஆதார் எண்ணை மீண்டுமாக உள்ளிட்டு சரிபார்க்கவும்.

# தற்போது இந்திய தனித்துவ அடையாள ஆணையம், உங்களுக்குக் கணக்கு இருப்பின் பிளாஷ் SMS-ஐ அனுப்பும்.