ஆக்ராவில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா ஒன்றில், குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றிருந்த 16 வயது சிறுவன் ஒருவன், ஜிப்-லைன் சவாரி செய்தபோது எதிர்பாராத விதமாக கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 45 அடி உயரத்தில் ஜிப்-லைன் சென்றுகொண்டிருந்தபோது, அதன் ஹூக் திடீரென உடைந்ததால், சிறுவன் நிலைதடுமாறி கீழே விழுந்தான்.

மேலும் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் தங்கள் கண் முன்னே நடந்த இந்த கோர விபத்தைக் கண்டு கதறி அழுத காட்சி காண்போரை பதைபதைக்க வைத்தது. இந்த விபத்து குறித்து உடனடியாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை, பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக அந்தப் பூங்காவில் இருந்த ஜிப்-லைன் வசதியைத் தற்காலிகமாக மூடியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Patiala Politics (@patialapolitics)

“>

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாகப் பூங்கா மேலாளர் மற்றும் பாதுகாப்பு பொறுப்பாளர் உள்ளிட்டோரை விசாரணைக்காகக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சுற்றுலாத் தலங்களில் இதுபோன்ற சாகச விளையாட்டுகளின் போது பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது வலுத்துள்ளது.