இந்திய அளவில் போதைப்பொருள் சார்ந்த வழக்குகள் விசாரணையின்றி பெருமளவில் தேங்கியுள்ள நிலையில், தமிழகம் இதில் முதலிடத்தைப் பிடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வழக்குகள் குவியக் காரணம் என்ன?மத்திய மற்றும் மாநில அரசுகள் போதைப்பொருட்களுக்கு எதிராகத் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தபோதிலும், இந்தியா முழுவதும் சுமார் 3.9 லட்சம் போதைப்பொருள் வழக்குகள் தற்போதைக்கு நிலுவையில் உள்ளன.
இதில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் மட்டும் 15,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் முடிவுக்கு வராமல் தேங்கிக் கிடக்கின்றன. போதைப்பொருள் பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் இக்காலக்கட்டத்தில், நிலுவை வழக்குகளை விரைந்து முடிப்பதே குற்றவாளிகளுக்கு சட்டரீதியான அச்சத்தை உருவாக்கும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
