நகரில் பிஎம்டபிள்யூ காரின் மேற்கூரையில் தள்ளுவண்டியை வைத்துக்கொண்டு செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த காரை ஓட்டிச் சென்ற ஜைத் என்ற இளைஞர், சாலையோரம் உப்புடன் ரொட்டி சாப்பிட்டுக் கொண்டிருந்த ஏழை முதியவர் ஒருவரைப் பார்த்துள்ளார்.
மேலும் அந்த முதியவரின் வறுமை மற்றும் போராட்டமான வாழ்க்கையைக் கண்டு மனம் உருகிய ஜைத், அவருக்கு உதவ முடிவு செய்து, உடனடியாக ஒரு புதிய தள்ளுவண்டியை விலைக்கு வாங்கி, அதனுடன் விற்பனைக்கான பொருட்களையும் சேர்த்து அந்த முதியவருக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
कानपुर में बीएमडब्ल्यू कार के छत पर ठेला…#kanpur pic.twitter.com/XJHDD3hB5T
— Pawan Kumar Sharma (@pawanks1997) May 25, 2026
“>
இந்த நெகிழ்ச்சியான செயல் பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. அந்த முதியவர் தனது பிழைப்புக்காக டின் பெட்டிகளில் தின்பண்டங்களை விற்று வருவதை அறிந்த ஜைத், அவருக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இந்த உதவியைச் செய்துள்ளார்.
இந்நிலையில் சொகுசு காரில் சென்றாலும், சக மனிதனின் துயரத்தைப் புரிந்து கொண்டு அவர் செய்த இந்த மனிதாபிமான செயல், சமூகத்தில் மற்றவர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமைந்திருக்கிறது. இந்த வைரல் வீடியோ தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தையும் நேர்மறையான வரவேற்பையும் பெற்று வருகிறது.
