வெளிநாட்டில் மருத்துவ படிப்பை நிறைவு செய்தவர்கள் உள்ளுறை பயிற்சி மேற்கொள்ள தமிழகத்தில் நடப்பு ஆண்டில் 4,430 இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 46 அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளிலும் 26 அனுமதிக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளிலும் ஒப்புதல் வழங்கப்பட்ட உள்ளுறை பயிற்சி இடங்களை மருத்துவமனையும் வெளியேற்றுள்ளது.

அதன்படி மொத்தம் 4,430 இடங்கள் நிகழாண்டில் உள்ளுறை பயிற்சிக்கு வழங்கப்பட்டுள்ளன. அனுமதிக்கப்பட்ட கல்லூரிகள் அனைத்தும் ஐந்து வருடங்களுக்குள் தொடங்கப்பட்டவை என்பதால் அங்கு உள்ளுறை பயிற்சி மேற்கொள்ளும் அந்த கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். எனவே அவர்களுக்கான இடங்களும் நடப்பு ஆண்டில் வெளிநாட்டில் மருத்துவம் பயின்றவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.