தமிழகம் முழுவதும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 4000 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலம் என 65 துறைகளில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதற்கான எழுத்து தேர்வு உத்தேசமாக ஆகஸ்ட் 4ம் தேதி நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு இன்று மார்ச் 28 முதல் ஏப்ரல் 29 வரை விண்ணப்பிக்கலாம்.