சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு  இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக சில நேரங்களில் விலங்குகளின் செயல் மனிதர்களை சிந்திக்க மற்றும் ஆச்சரியப்பட வைக்கிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் வன விலங்குகளை கண்காணிக்க வைக்கப்பட்ட கேமராவில் கரடி ஒன்று 400 போட்டோக்களுக்கு போஸ் கொடுத்துள்ளது. போல்டர், கொலராடோ பகுதியில் பொருத்தப்பட்ட கேமரா ஒன்றில் பதிவான 580 புகைப்படங்களில் சுமார் 400 புகைப்படங்களுக்கு ஒரு கரடி போஸ் கொடுத்து ஆச்சரியமடைய செய்துள்ளது. இவ்வாறு ஒரு கரடி இத்தனை போட்டோக்களுக்கு விதவிதமாக போஸ் கொடுத்தது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.