உலகம் முழுவதும் உள்ள மைக்ரோசாப்டின் அவுட்லுக், மைக்ரோசாப்ட் 365, டீம்ஸ் போன்றவற்றின் சேவைகள் நேற்று பல மணி நேரம் முடங்கியுள்ளது. இதன் காரணமாக பயனர்கள் மின்னஞ்சல்களை அனுப்பவும், பெறவும் முடியாமல் போனதாக கூறியுள்ளனர். உலகம் முழுவதும் இந்த பாதிப்பு இருந்த போதிலும் இந்திய பயனர்களை அதிக அளவில் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அதே போல் ஆஸ்திரேலியா, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளின் பயனர்களும் மைக்ரோசாப்டின் சேவைகள் முடங்கியதாக புகார் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து மைக்ரோசாப்ட் 365 ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில் கூறப்பட்டதாவது, நெட்வொர்க்கில் சிக்கல் இருந்ததாகவும் அதற்கு தீர்வு காணும் பணியில் தொழில் நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர். அதனால்  மேற்கொண்டு தாக்கம் எதுவும் இல்லாமல் இருக்கும் விதமாக கவனம் செலுத்தி வரப்படுகிறது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.