நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நாசாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஆர்டெமிஸ் 2’ (Artemis II) திட்டத்தில் ஒரு பரபரப்பான சம்பவம் அரங்கேறியுள்ளது. நிலவைச் சுற்றி ஆய்வு செய்து வரும் விண்வெளி வீரர்கள் பயணம் செய்த விண்கலம், பூமியுடனான தொடர்பை திடீரென இழந்ததால் நாசா விஞ்ஞானிகள் மத்தியில் பெரும் பதற்றம் நிலவியது.

சுமார் 40 நிமிடங்கள் நீடித்த இந்தத் ‘பிளாக் அவுட்’ (Blackout) நேரத்தில் விண்வெளி வீரர்களின் நிலை என்ன ஆனது என்றே தெரியாமல் ஒட்டுமொத்த உலகமும் திக் திக் நிமிடங்களைக் கடந்தது.

விண்கலம் நிலவின் மறுபக்கத்திற்குச் சென்றபோது ஏற்பட்ட இந்தத் தொழில்நுட்ப இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் வெற்றிகரமாகத் தொடர்பு கிடைத்துள்ளதாக நாசா மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.

தற்போது வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், விண்கலம் திட்டமிட்டபடி அதன் பயணத்தைத் தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித குலத்தின் அடுத்தகட்ட நிலவுப் பயணத்தில் ஏற்பட்ட இந்தச் சிறிய தடையைத் தாண்டி வீரர்கள் மீண்டும் தொடர்பிற்கு வந்தது மிகப்பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.