தமிழகத்தில் பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அதன் பிறகு இன்று தமிழ்நாட்டிற்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலை முதல் சென்னையில் 40 கிலோ மீட்டர் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தற்போது சென்னையில் உள்ள வேளச்சேரி உள்ளிட்ட மேம்பாலங்களில் பொதுமக்கள் கார்களை நிறுத்தி வைத்துள்ளனர்.

இதற்கு முன்பும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட போது மக்கள் கார்களை மேம்பாலங்களில் நிறுத்தி வைத்திருந்தனர். அதேபோன்று தற்போதும் வேளச்சேரி, தியாகராய நகர் ஜிஎன் ஜெட்டி ரோடு ஆகிய பகுதிகளில் வாகன ஓட்டிகள் வரிசையாக தங்கள் கார்களை நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் புயல் காரணமாக பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேம்பாலங்களில் தங்கள் வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர்.