மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் தங்களுக்கான உரிமைகளுடன் வாழும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே, அரசு பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தது. இந்தக் காலகட்டத்தில், தற்போது அந்த இடஒதுக்கீடு எந்தெந்த பதவிகளுக்கு பொருந்தும் என்பதையும் அரசு தெளிவாக வெளியிட்டுள்ளது.
அதன்படி, அரசு வெளியிட்ட புதிய அரசாணையின் படி, ஏ, பி, சி, டி என வகைப்படுத்தப்பட்டுள்ள நான்கு நிலைகளிலும் மொத்தம் 119 அரசு பணியிடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றவை என குறிப்பிடப்பட்டுள்ளது. இது மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் மேம்பட வழிவகுக்கும் என்றும் சமூக நலம் சார்ந்த அமைப்புகள் பாராட்டுகின்றன.
