திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புதுகலராம்பட்டி பகுதியில் பொன்னர் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 9-ஆம் தேதி பொன்னர் தனது நண்பரான தவமணி என்பவருடன் அப்பகுதியில் இருக்கும் நாடக மேடை அருகே கேரம் போர்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த தவமணி உறவினர்களுடன் இணைந்து பொன்னகரை உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதனால் படுகாயமடைந்த பொன்னகர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து பொன்னகரின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தவமணி, மகாலட்சுமி, சுபாஷ், பகவதி ஆகிய 4 பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.