சென்னை மாவட்டத்தில் உள்ள வளசரவாக்கம் ஆழ்வார் திருநகர் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் ஒரு குறிப்பிட்ட வீட்டில் சோதனை நடத்திய போது பெண்களை அடைத்து வைத்து விபச்சாரம் நடத்தியது உறுதியானது.

இதனையடுத்து ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கிலோபர்தி சுதாகர்(46), அவரது மனைவி இந்து(32) கிண்டியில் வசிக்கும் சீனிவாசன்(25) ராஜ்குமார்(47) ஆகிய நான்கு பேரையும் விபச்சாரம் நடத்தியதற்காக போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதனையடுத்து அங்கிருந்த 2 பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.